மும்பை,
ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளது. இந்த சூழலில் அந்த அணியில் இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களை கொண்டு ஆல் டைம் பெஸ்ட் சிஎஸ்கே அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தேர்வு செய்துள்ளார்.
அவர் தேர்வு செய்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை. அதுபோக பதிரனா, கான்வே, பிராவோ போன்ற நட்சத்திர வீரர்களையும் அவர் தேர்வு செய்யவில்லை.
சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த சிஎஸ்கே அணி:
மகேந்திரசிங் தோனி, முரளி விஜய், மேத்யூ ஹைடன், மைக்கேல் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, சுப்ரமணியம் பத்ரிநாத், அல்பி மோர்கல், டக் பொலிங்கர், ஷதாப் ஜகாதி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, பாலாஜி, மோகித் சர்மா.
இம்பேக்ட் பிளேயர்: முத்தையா முரளிதரன்