Yamaha R15 updated with new colours – ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான R15 V4 மாடலில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டு ரூ.1.69 லட்சம் முதல் ரூ. 2.13 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.

எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து LC4V 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 10,000rpm-ல் 18.1 bhp பவர் மற்றும் 7,500rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிலிப்பர் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

2025யின் யமஹா ஆர்15 பைக்கின் மாற்றங்கள்

  • R15M பைக்கில் புதியதாக மெட்டாலிக் சாம்பல் நிறம் வந்துள்ளது
  • R15 V4 புதிய மெட்டாலிக் கருப்பு, ரேசிங் ப்ளூ மற்றும் மெட்டாலிக் வெள்ளை பேரல் நிறத்துடன் டைனமிக் புதிய கிராபிக்ஸ் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • R15S புதிய மேட் கருப்பு நிறத்துடன் வெர்மிலியன் நிறத்திலான சக்கரங்களுடன் கிடைக்கிறது.

R15 விலைப் பட்டியல்

Ex. Showroom
Yamaha R15M ₹ 2,02,539 – ₹ 2,13,559
Yamaha R15 V4 ₹ 1,86,309 – ₹ 1,91,309
Yamaha R15S ₹ 1,69,369

டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியுடன் கிடைக்கின்ற ஆர்15 வி4 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் ஆர்15 எம் வேரியண்டில் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச், பை-டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர், ஆர்15எஸ் வேரியண்டில் ஒற்றை இருக்கை பெற்றுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.