பீஜிங்,
சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக உள்ளன. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவது, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதியை சீனா வழங்கி வந்தது. தற்போது இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் முக்கிய ரெயில்வே திட்டத்துக்கு சீனா நிதி வழங்க மறுத்துள்ளது. (இந்தியா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China – Pakistan Economic Corridor) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் கராச்சி -ரோஹ்ரி பிரிவு இடையேயான ரெயில்வேயை மேம்படுத்த பாகிஸ்தான் முடிவு செய்தது. இதற்கான நிதியை சீனாவிடம் கேட்டது)
பாகிஸ்தானின் மோசமான நிதி நிலைமை, கடனை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு திட்டத்தில் இருந்து சீனா வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
சீனா-பாக். பொருளாதார வழித்தடத்தின் முக்கிய பகுதியாகக் கருதப்பட்ட இந்த ரெயில்வே திட்டத்திற்கு, $2 பில்லியன் நிதியளிக்கக் கோரி ஆசிய மேம்பாட்டு வங்கியை பாகிஸ்தான் நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.