சென்னை: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது அதிமுகவின ரிடையே சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இதனால், , கடந்த சில மாதங்களாக எடப்பாடியின் நிகழ்ச்சியை செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 5ந்தேதி) செய்தியளார்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை […]
