டிஜிட்டல் விருதுகள் 2025
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!
`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.
யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Digital ICON Award – Madan Gowri
உலகம் மற்றும் உள்ளூர் நிகழ்வுகள் அனைத்தையும் நேர்த்தியாக இத்தனை ஆண்டுகள் யூட்யூப் தளத்தில் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் மதன் கெளரிதான், டிஜிட்டல் ஐகான் விருதுக்கு ஜூரிக்கள் தேர்வு செய்திருக்கும் வெற்றியாளர்.

Digital ICON Award – Madan Gowri
செய்திகளை அதன் பின்னணியோடு தெளிவு கூட்டி தமிழ்ச் சமூகத்திடம் கொண்டுபோய் சேர்க்கும் மதன் கௌரிதான் இப்போது இளம் தலைமுறையின் ஆல்டைம் பேவரைட். உள்ளூர் செய்திகளில் ஆரம்பித்து உக்ரைன் போர் வரைக்கும் அலசி ஆராய்ந்து சுவாரஸ்யத்தோடு பேசும் பாணியில் இருக்கிறது அவரது வெற்றிக்கான பரம ரகசியம்.

இளையோர் மனதிலும் இடம்பிடித்து இடைவெளியின்றி இயங்கிவரும் மதன் கௌரிக்கு Digital ICON விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது விகடன்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…