ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது லீக் ஆட்டமாகிய இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதும் போட்டி இன்று (செப்டம்பர் 10) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா இடம் பெற்றிருந்தார். அத்துடன் அவருக்கு பக்க பலமாக ஹர்திக் பாண்டியாவை வைத்துக்கொண்டு 3 சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு சென்றனர்.
Add Zee News as a Preferred Source
இந்த நிலையில், இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருக்க, முதல் ஓவரை ஹார்டிக் பாண்டியா பந்து வீசி தொடங்கினார். இது பார்வையாளர்கள் மற்றும் நிபுணர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மைதானத்தின் இருபுறமும் பந்துவீச்சுக்கு நிலைமைகள் மாறுபடுவதாலேயே இந்த நடைமுறை எடுக்கப்பட்டது என்று விளக்கம் வெளியாகியுள்ளது.
போட்டியின் தொடக்கத்தில், புல் வளர்ந்திருந்த பெவிலியன் எண்ட் வாயிலாக பந்து வீச்சு தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த எண்டை ஹார்டிக் பாண்டியா எடுத்துக் கொண்டார். வேகப்பந்து வீச்சுக்கு எளிதான, தட்டையான மற்றொரு எண்டை பும்ரா தேர்வு செய்ததால் அவர் இரண்டாவது ஓவரிலிருந்து பந்துவீசினார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் யுஏஇ அணி 59 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. இதையடுத்து இந்திய அணி 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் சார்பில், சிவம் துபே மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
இரு அணிகளின் பிளேயிங் 11
இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விகீ), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி.
யுஏஇ: முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா (வி.கே), ஆசிப் கான், ஹர்ஷித் கவுஷிக், துருவ் பராஷர், ஹைதர் அலி, முஹம்மது ரோஹித் கான், ஜுனைத் சித்திக், சிம்ரன்ஜீத் சிங்.
About the Author
R Balaji