பெங்களூரு,
62-வது துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதி சுற்று முடிவில் மத்திய மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதன் இறுதிப்போட்டி இன்று தொடங்குகிறது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான மத்திய மண்டலமும், முகமது அசாருதீன் தலைமையிலான தெற்கு மண்டலமும் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தெற்கு மண்டலம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
தெற்கு மண்டலம்: மோஹித் காலே, முகமது அசாருதீன் (கேப்டன்), ஆண்ட்ரே சித்தார்த், ரிக்கி புய், ஸ்மரன் ரவிச்சந்திரன், சல்மான் நிசார், குர்ஜப்னீத் சிங், அங்கித் சர்மா, எம்.டி.நிதீஷ், வாசுகி கவுஷிக், தனய் தியாகராஜன்
மத்திய மண்டலம்: ரஜத் படிதார் (கேப்டன்), டேனிஷ் மாலேவார், சுபம் சர்மா, யாஷ் ரத்தோட், உபேந்திர யாதவ், அக்ஷய் வாட்கர், சரண்ஷ் ஜெயின், தீபக் சாஹர், ஆதித்யா தாகரே, குமார் கார்த்திகேயா, குல்தீப் சென்