கிரிக்கெட் உலகில் பரம வைரிகள் என்றால் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் தான். இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு வேறு அணிகளுக்கு இடையேயான போட்டி இருப்பதில்லை. ஆனால் கடந்த 41 ஆண்டுகளில் 16 ஆசியக் கோப்பை தொடர்கள் நடந்தபோதும், இந்த இரு அணிகளும் ஒருமுறை கூட இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதியதில்லை. சுவாரஸ்யமான மற்றும் நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. இதற்கான காரணத்தை, இங்கே பார்க்கலாம்.
Add Zee News as a Preferred Source
ஆசிய கோப்பை தொடர் வரலாறு
இதுவரை ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 18 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 10 போட்டிகளிலும், பாகிஸ்தான் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் முடிவில்லாமல் சமனில் முடிந்துள்ளன.
1984 முதல் 1988: முதல் ஆசியக் கோப்பை தொடர் (1984) ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றது. இதில் இந்தியாவும் இலங்கையும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டி இல்லாமல் கோப்பையை தீர்மானித்தனர். அடுத்தடுத்த தொடர்களில் (1986, 1988), இரு அணிகளும் லீக் சுற்றில் மோதியபோதும், இறுதிப் போட்டிக்கு இரு அணிகளும் தகுதி பெறவில்லை.
1995ல் நெருக்கமான வாய்ப்பு: 1995 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு மிக நெருக்கமாக இருந்தது. இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருந்தபோதும், பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் தோல்வியடைந்ததுடன், குறைந்த நிகர ரன் ரேட் காரணமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறி, மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு கோப்பையை வென்றது.
2000, 2012 மற்றும் 2014ல் இந்தியாவின் சோகம்: 2000 ஆம் ஆண்டில் இந்தியா லீக் சுற்றில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. பாகிஸ்தான் அந்த தொடரின் சாம்பியன் ஆனது. 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், இந்தியா மீண்டும் லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதன் காரணமாக, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் வாய்ப்பை இழந்தது.
சூப்பர் ஃபோர் சுற்றில் தவறவிட்ட வாய்ப்புகள்: 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில், இரு அணிகளும் சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேறின. ஆனால் பாகிஸ்தான் அணி, நிகர ரன் ரேட் காரணமாக, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறியது.
2022 மற்றும் 2023 ஏமாற்றம்: 2022 ஆசியக் கோப்பை டி20 வடிவில் நடைபெற்றது. இதில், சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறியது. 2023 ஆம் ஆண்டில், இந்தியா சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும், பாகிஸ்தான் சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில் வெளியேறியதால், இந்த முறையும் இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டி அமையவில்லை.
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்.
பாகிஸ்தான் அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது, சுஃபியான் முகீம்.
About the Author
S.Karthikeyan