சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ தமிழ்நாடு அரசின் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) முதல்வர் தொடக்கி வைத்தார். அத்துடன், பெற்றோர் இருவரையும் இழந்து பிளஸ் 2 வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார். இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடக்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார். மடிக்கணினிகளை வழங்கும் […]