பீஜிங்,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும் என்று நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வரு கிறார்.இந்த நிலையில் டிரம் புக்கு சீனா பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறிய தாவது:-சீனா ஒரு பொறுப்பான பெரிய நாடு.
அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச் சினைகளில் சிறந்த சாதனை யைக் கொண்ட நாடு ஆகும். போரால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. வரி மற்றும் பொருளாதார தடைகள் விதிப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக தான் மாற்றும். சீனா போர்களில் பங்கேற்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை. அமைதிப் பேச்சு வார்த்தைகளை ஊக்குவிப்ப தும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை காண்பதும் சீனா வின் நோக்கமாகும் என்றார்.