நாட்டின் முதன்மையான மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு பட்டியல் தற்பொழுது வரை அறிவிக்கப்படாத நிலையில் டீலர்களுக்கு வழங்கப்பட்ட தோராயமான விலை குறைப்பு அடிப்படையில் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச விலை குறைப்பை மாருதியின் பிரசத்தி பெற்ற ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவர் ரூ.1.11 லட்சம் வரை குறையக்கூடும், இதற்கு அடுத்தப்படியாக ஸ்விஃப்ட் காருக்கு 1.06 லட்சம் ரூபாயும், டிசையருக்கு ரூ.87,000 வரை குறைய உள்ளது.
Model | New Price (after GST benefit) |
---|---|
Alto K10 | ₹53,000 |
S‑Presso | ₹53,000 |
Wagon‑R | ₹64,000 |
Celerio | ₹63,000 |
Eeco | ₹60,000 |
Swift | ₹1,06,000 |
Ertiga | ₹47,000 |
Dzire | ₹87,000 |
Brezza | ₹48,000 |
Ignis | ₹69,000 |
Baleno | ₹85,000 |
Fronx | ₹1,11,000 |
Jimny | ₹52,000 |
Grand Vitara | ₹68,000 |
XL6 | ₹52,000 |
Invicto | ₹61,000 |
சிறிய ரக கார் சந்தையில் உள்ள ஆல்டோ முதல் ஈக்கோ வரை உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ.53,000 முதல் ரூ.60,000 வரை விலை குறைய உள்ளது. எர்டிகா காருக்கு ரூ.47,000 மற்றும் பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு ரூ.48,000 வரை விலை குறைக்கப்பட உள்ளது.
புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் ஜிஎஸ்டி விலை குறைப்பிற்கு பிந்தைய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.