ஆசிய கோப்பை 2025 தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 8 போட்டிகளில் முடிவடைந்துள்ளது. இன்று (செப்டம்பர் 17) பாகிஸ்தான் அணி யுஏஇ அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தது. இதன் காரணம், செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டி தான்.
Add Zee News as a Preferred Source
அப்போட்டி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கைக்குலுக்காமல் போனது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. கைக் கொடுக்க வேண்டாம் என நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் தான் கூறினார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது. மேலும், அவரை இத்தொடரில் இருந்து நீக்கவில்லை என்றால், நாங்கள் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியை புறகணிப்போம் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும் பயிற்சிக்கு பாகிஸ்தான் வீரர்கள் வரவில்லை என கூறப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணி யுஏஇ அணியை புறக்கணித்து தொடரை விட்டு வெளியேறினால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் இருந்தது. இந்த நிலையில், இதனை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகளில் மட்டும் போட்டி நடுவராக ஆண்டி பைக்ராஃப்ட் செயல்பட மாட்டார் என ஐசிசி அறிவித்திருக்கிறது.
ஆண்டி பைக்ராஃப்ட்-க்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்ஸன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொண்டு ஆண்டி பைக்ராஃப்ட் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த காரணத்தினால், அவர்கள் தற்போது யுஏஇ அணிக்கு எதிரான போட்டியை விளையாட உள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தற்போது மைதானத்திற்கு பயிற்சிகாக வந்திருக்கின்றனர். இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. பாகிஸ்தான் அணி யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், அவர்களும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவார்கள். பின்னர் மீண்டும் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் சூழல் ஏற்படும்.
பாகிஸ்தான் – யுஏஇ போட்டி – இரு அணிகளுக்கான உத்தேச பிளேயிங் 11
பாகிஸ்தான் அணி: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.
யுஏஇ அணி: அலிஷான் ஷராபு, முஹம்மது வசீம் (கேப்டன்), முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா (வாரம்), ஆசிப் கான், ஹர்ஷித் கௌஷிக், துருவ் பராஷர், ஹைதர் அலி, முஹம்மது ரோஹித் கான், முஹம்மது ஜவதுல்லா, ஜுனைத் சித்திக்.
About the Author
R Balaji