சென்னை: சென்னை அருகே எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம் எண்ணூர் அருகே அமைக்கும் 330 மெகாவாட் மின் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்பாயம், சுற்றுச்சூழல் […]