சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பகிசன், 34 வயதான இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும் இவரது பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இவரை ‘நாடற்றவர்’ என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்க உள்ளதாவதும் தெரிவித்துள்ளது. பகிசனின் பெற்றோர் ரவீந்திரன் மற்றும் ஜெயா இலங்கையில் நடைபெற்ற இன மோதலை அடுத்து திரிகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு 1991ம் ஆண்டு அகதிகளாக வந்து சேர்ந்தனர். ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் இவர்கள் […]
