உடன்குடி: புகழ்பெற்ற குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கு தடை உள்பட பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை (செப்டம்பர் 23ந்தேதி) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் […]
