USA அணியை அதிரடியாக நீக்கிய ஐசிசி! கிரிக்கெட் உலகில் பரபரப்பு! என்ன காரணம்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை நிர்வாக சீர்கேடுகளை காரணம் காட்டி உடனடியாக இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முடிவு உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐசிசி வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பை செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணங்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

JUST IN 

The ICC has suspended the membership status of USA Cricket with immediate effect.

Failure to implement a functional governance structure and significant actions that have caused reputational damage to cricket in the US and around the world, are among the reasons…

— Cricbuzz (@cricbuzz) September 23, 2025

ஐசிசி குறிப்பிட்டுள்ள முக்கிய காரணங்கள்
ஒரு நிலையான மற்றும் செயல்படும் நிர்வாக அமைப்பை உருவாக்க தவறியது.
ஐசிசியின் அரசியலமைப்பின் கீழ், ஒரு உறுப்பினராக தனது கடமைகளை தொடர்ச்சியாக மீறியது.
அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுவிடம் இருந்து, தேசிய நிர்வாக அமைப்பு என்ற அங்கீகாரத்தை பெறுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது.
அமெரிக்காவிலும், உலக அளவிலும் கிரிக்கெட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள்.
வீரர்கள் மற்றும் அணிகளுக்கு பாதிப்பில்லை

இந்த இடைநீக்க நடவடிக்கையை துரதிர்ஷ்டவசமானது ஆனால் அவசியமானது என்று குறிப்பிட்டுள்ள ஐசிசி, இந்த நடவடிக்கையால் வீரர்களோ அல்லது விளையாட்டோ பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்துள்ளது.  அமெரிக்காவின் தேசிய அணிகள், ஐசிசி நடத்தும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கலாம். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தயாரிப்புகளிலும், அதில் பங்கேற்பதிலும் எந்த தடையும் இல்லை.  இடைநீக்கம் அமலில் இருக்கும் வரை, அமெரிக்க தேசிய அணிகளின் நிர்வாகம் மற்றும் மேலாண்மையை, ஐசிசியே நேரடியாகவோ அல்லது அதன் பிரதிநிதிகள் மூலமாகவோ தற்காலிகமாக கவனிக்கும்.

மீண்டும் அங்கீகாரம் பெறுவது எப்படி?

அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் இடைநீக்கத்தை ரத்து செய்து, மீண்டும் உறுப்பினர் அந்தஸ்தை வழங்குவதற்கான வழிமுறைகளை, ஐசிசியின் Normalisation Committee வகுக்கும். ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையிலான இந்த குழு, அமெரிக்க கிரிக்கெட் சங்கம் தனது நிர்வாக அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த நிலையில் செய்ய வேண்டிய உறுதியான மற்றும் குறிப்பிட்ட மாற்றங்களை கோடிட்டு காட்டும். இந்த மாற்றங்களின் முன்னேற்றத்தை இந்த குழு தொடர்ந்து கண்காணிக்கும்.

2024ம் ஆண்டிலேயே, அமெரிக்க கிரிக்கெட் சங்கம் ஐசிசியால் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. முறையான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை நடத்தி, நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டும், அதனை செயல்படுத்தத் தவறியதாலேயே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் கிரிக்கெட்டின் நீண்டகால நலன்களை பாதுகாக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.