“ஒருவர் தானாகவே இசையமைப்பாளர் ஆகிவிடுவதில்லை'' – ஏ.ஆர். ரஹ்மான் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பொன்னியின் செல்வன்.

2023-ம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2-வில் இருக்கும் ‘வீர ராஜா வீரா’ பாடல் பதிப்புரிமை வழக்கை எதிர்கொண்டது.

Ponniyin Selvan 2 | பொன்னியின் செல்வன் 2
Ponniyin Selvan 2 | பொன்னியின் செல்வன் 2

ஏ.ஆர். ரஹ்மான் மீது என்ன வழக்கு?

கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் டாகர், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “வீர ராஜ வீர பாடல் தனது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட சிவ ஸ்துதியை அடிப்படையாகக் கொண்டது.

ஏ.ஆர்.ரஹ்மானின் வீர ராஜா வீர பாடல் வரிகளில் சிவ ஸ்துதியிலிருந்து வேறுபட்டிருக்கலாம், ஆனால் பாடலின் தாளமும் ஒட்டுமொத்த இசை அமைப்பும் எங்களின் குடும்ப இசையமைப்பைப் போலவே இருக்கிறது.

இதன் அசல் பாடல் உலகளவில் ஜூனியர் தாகர் சகோதரர்களால் நிகழ்த்தப்பட்டது, அந்த நேரத்தில் பான் ரெக்கார்ட்ஸாலால் கூட வெளியிடப்பட்டது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றம் சொன்னது என்ன?

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி “வீர ராஜா வீராவின் மையக்கரு, வழக்கு இசையான சிவ ஸ்துதியின் ஸ்வரஸ் (குறிப்புகள்), பாவ (உணர்ச்சி) மற்றும் செவிப்புலன் தாக்கம் ஆகியவற்றில் ஒரே மாதிரியாக இருக்கிறது எனக் குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், இதை உரிமை மீறல் வழக்காக எடுத்துக்கொண்டு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.

ஏ.ஆர் ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான்

அதில், ஏ.ஆர். ரஹ்மானும் படத்தின் தயாரிப்பாளர்களும் அனைத்து ஆன்லைன் தளங்களிலும் டாகர் சகோதரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும். டாகர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் செலவுகளை வழங்கவும், நீதிமன்ற பதிவேட்டில் ரூ.2 கோடியை டெபாசிட் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

ஏ.ஆர். ரஹ்மானின் மேல் முறையீடு:

இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சி ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

தீர்ப்பு
தீர்ப்பு

அதன் பிறகு அவர்கள் அளித்த தீர்ப்பில், “ ஒரு இசையை வழங்குபவர் தானாகவே இசையமைப்பாளர் ஆகிவிடுவதில்லை. இது கொள்கை ரீதியிலும், சட்டத்தின் அடிப்படையிலும் தவறான அணுகுமுறை.

எனவே, தனி நீதிபதி கொள்கை ரீதியாகவும், தீர்ப்பின் அடிப்படையிலும் தவறு செய்துள்ளார் என்று நாங்கள் கருதுகிறோம்.

கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது, அதனால் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டோம். இதன் அடிப்படையில், தனி நீதிபதி வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்கிறோம்” என உத்தரவிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.