IND vs WI: ஓரங்கட்டப்பட்ட இந்த 5 வீரர்கள்… பண்ட் இல்லை – இந்திய அணி அறிவிப்பு

IND vs WI, Team India Squad Announcement: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மான் கில் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ரிஷப் பண்ட் ஸ்குவாடில் இடம்பெறவில்லை. எனவே, துணை கேப்டன் பொறுப்பு ரவீந்திர ஜடேஜாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

#INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/S4D5mDGJNN

— BCCI (@BCCI) September 25, 2025

IND vs WI: ஓரங்கட்டப்பட்ட 5 வீரர்கள்

தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஸ்குவாடில் இடம்பெற்றிருந்த கருண் நாயர், ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர், அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சர்ஃபராஸ் கானுக்கு இம்முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அக்சர் பட்டேல் அணிக்கு திரும்பி உள்ளார். காயத்தில் இருந்து மீண்டு நிதிஷ் குமார் ரெட்டியும் அணிக்கு திரும்பி உள்ளார். நாராயண் ஜெகதீசன், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர்.

IND vs WI: பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும்?

ஓபனிங் வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் தொடர்வார்கள். மேலும் ஓபனிங் பேட்டர்களுக்கு பேக்அப் எடுக்கவில்லை. சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகியோரில் ஒருவர் நம்பர் 3இல் இறங்குவார்கள்.  நம்பர் 4இல் கேப்டன் சுப்மான் கில் களமிறங்குவார். நம்பர் 5இல் துருவ் ஜூரேல் களமிறங்குவார், நாராயண் ஜெகதீசன் பேக்அப் விக்கெட் கீப்பர் பேட்டராக இருப்பார். அடுத்து ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இடம்பெறுவார்கள். நம்பர் 8இல் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் பட்டேல் ஆகியோரில் ஒருவர் விளையாடுவார். குல்தீப் யாதவ் ஒரே மேலும் பும்ரா, சிராஜ், ஆகியோர் அடுத்தடுத்து களமிறங்குவார்கள். பிரசித் கிருஷ்ணா பேக்அப் பௌலராக இருப்பார்.

IND vs WI: ஆசிய கோப்பைக்கு பின் உடனே…

வரும் அக்டோபர் 2 – அக்டோபர் 6 வரை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் முதல் டெஸ்ட்  போட்டியும், அக்டோபர் 10 – அக்டோபர் 14 வரை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை 2025 தொடருக்கு பின் இந்திய அணி நாடு திரும்பிய உடனேயே இத்தொடர் தொடங்கும் எனலாம். செப். 28ஆம் தேதி அன்று ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நிறைவடையும். சுப்மான் கில், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த 4 வீரர்களும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.

IND vs WI: இந்திய அணி ஸ்குவாட்

சுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரேல், நாராயண் ஜெகதீசன், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author


Sudharsan G

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.