புதுடெல்லி,
நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்னை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Related Tags :