நவம்பரில் மெருகூட்டப்பட்ட ‘அரட்டை’ செயலி: சோஹோ ஸ்ரீதர் வேம்பு தகவல்

புதுடெல்லி: மெரு​கூட்​டப்​பட்ட மற்​றும் தொழில்​நுட்ப ரீதி​யில் மேம்​படுத்​தப்​பட்ட அரட்டை செயலி வரும் நவம்​பருக்​குள் வெளி​யிட திட்​ட​மிட்​டுள்​ள​தாக சோஹோ கார்ப்​பரேஷனின் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறி​யுள்​ள​தாவது: உண்​மை​யில் நவம்​பர் மாதத்​துக்​குள் ஒரு பெரிய வெளி​யீட்டை நாங்​கள் திட்​ட​மிட்​டுள்​ளோம். அரட்டை செயலி​யில் கூடு​தல் உள்​கட்​டமைப்பு சேர்க்​கப்​பட்​டாலும், சிக்​கல்​கள் எழும்​போது அவற்றை சரிசெய்ய நிறு​வனம் நிரலை புதுப்​பித்து வரு​கிறது. அரட்டை செயலி​யின் பதி​விறக்​கம் ஒரு நாளைக்கு 3,000 லிருந்து 3,50,000 ஆக உயர்ந்​த​தால், மூன்று நாட்​களில் அதன்​பயன்​பாட்​டில் மிகப்​பெரிய அளவுக்கு அதி​கரிப்பு ஏற்​பட்​டுள்​ளது.

அரட்​டைக்கு நாங்​கள் இன்​னும் நிறைய திட்​ட​மிட்​டுள்​ளோம். தயவுசெய்து எங்​களுக்கு சிறிது நேரம் கொடுங்​கள். உங்​கள் பொறுமைக்​கும் ஆதர​வுக்கும் நன்​றி! ஜெய் ஹிந்த். இவ்​வாறு வேம்பு பதி​விட்​டுள்​ளார். முன்​ன​தாக, மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் சமீபத்​தில் இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட அரட்டை செயலியை ஆதரித்து பதி​விட்​டிருந்​தார்.

அவர் அதில், அரட்டை செயலி @Zoho இலவச​மானது, இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்​டது. சுதேசி​யைப் பின்​பற்​று​வதற்​கான பிரதமர் அழைப்​பின் பேரில், அரட்டை செயலி​யின் பயன்​பாட்​டுக்கு மாறு​மாறு கேட்​டுக் கொண்​டார். சோஹோ​வால் தொடங்​கப்​பட்ட அரட்டை செயலி வாட்​ஸ்​அப் போன்ற தளங்​களைப்​போல், செய்​தி​கள், படங்​கள், வீடியோக்​கள் மற்​றும் ஆவணங்​களை அனுப்​ப​வும்​, குரல்​ மற்​றும்​ வீடியோ அழைப்​பு​களை மேற்​கொள்​ள​வும்​, கதைகளைப்​ பகிர​வும்​, சேனல்​களை நிர்​வகிக்​க​வும்​ உதவு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.