கோபி: அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி என்ற அதிமுக அதிருப்தியாளர் செங்கோட்டையன் எம்எல்ஏ, ‘பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்த நிலையில் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார் இபிஎஸ். இதைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அரசியல் நகர்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதிமுகவை ஒருங்கிணைக்கும் […]
