ஹைதராபாத்தை சேர்ந்த பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த இளம் பல் மருத்​து​வர், அமெரிக்​கா​வில் நேற்று காலை மர்ம நபரால் சுட்டு கொல்​லப்​பட்​டார்.

ஹைத​ரா​பாத் பிஎன் நகரைச் சேர்ந்​தவர் போலே சந்​திரசேகர். இவர் பிடிஎஸ் பட்​டப்​படிப்பை முடித்து விட்​டு, கடந்த 2023-ம் ஆண்டு மேற்​படிப்​புக்​காக அமெ ரிக்​கா​வின் டெக்​ஸாஸ் மாகாணத்​தில் உள்ள டல்​லஸ் நகரில் குடியேறி​னார். கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு மேற்​படிப்பு முடித்த சந்​திரசேகர், அங்கு ஒரு நிரந்தர வேலையை தேடிக்​கொண்​டே, ஒரு காஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை​யில் அடை​யாளம் தெரி​யாத நபர் சந்​திரசேகரை துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​று​விட்டு தலைமறை​வாகி விட்​டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலே சந்திரசேகரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். தங்​களது மகன் உயர்ந்த அந்​தஸ்தை அடை​வான் என்று நம்​பிய அந்த பெற்​றோர் அப்​படியே உறைந்து போயுள்​ளனர். அவர்​களை நேற்று நேரில் சந்​தித்த முன்​னாள் அமைச்​சர் ஹரீஷ் ராவ், பிஆர்​எஸ் கட்சி எம்​எல்ஏ சுதீர் ரெட்டி ஆகியோர் இரங்​கல் தெரி​வித்​தனர்.

முதல்​வர் ரேவந்த் ரெட்​டி​யும் தனது ஆழ்ந்த இரங்​கல்​களை தெரி​வித்​ததோடு, சந்​திரசேகரின் உடலை விரை​வாக சொந்த ஊருக்​குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்​கப்​படும் என தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.