ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000: ஆந்திராவில் புதிய திட்டத்தை தொடங்கினார் முதல்வர் சந்திரபாபு

விஜயவாடா: ஆந்​தி​ரா​வில் ஆட்​டோ, டாக்​ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாக​னங்​களின் ஓட்​டுநர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று விஜய​வா​டா​வில் தொடங்கி வைத்​தார்.

ஆந்​திர மாநிலம் விஜய​வா​டா​வில் ‘ஆட்டோ ஓட்​டுநர்​களின் சேவை​யில்’ எனும் புதிய திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

அறி​வித்​ததை போலவே அறிவிக்​கப்​பட்ட தேதி​யில், இத்​திட்​டத்தை தொடங்கி வைப்​ப​தில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்​டத்​தின் கீழ் மாநிலம் முழு​வ​தி​லும் ஆட்​டோ, டாக்​ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாக​னங்​களின் ஓட்​டுநர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி​யுதவி வழங்​கப்​படும். இத்​தொகை அவர​வர் வங்​கிக் கணக்​கு​களில் நேரடி​யாக செலுத்​தப்​படும். இதற்​காக அரசுக்கு ஆண்​டுக்கு ரூ.436 கோடி செல​வாகும். இதன் மூலம் 2.64 லட்​சம் ஆட்டோ ஓட்​டுநர்​கள், 20,072 டாக்ஸி ஓட்​டுநர்​கள், 6,400 மேக்ஸி கேப் ஓட்​டுநர்​கள் என மொத்​தம் 2.90 லட்​சம் பேர் பயன் அடை​வார்​கள்.

கடந்த 2024-ம் ஆண்டு தேர்​தலில் எங்​கள் கூட்​ட​ணிக்கு 94 சதவீத வாக்​கு​களை வழங்கி மக்​கள் மாபெரும் வெற்​றியை கொடுத்​தனர். கடந்த 15 மாதங்​களில் எங்​களு​டைய ஆட்​சி​யில் பல நல்ல திட்​டங்​களை அமல்​படுத்தி உள்​ளோம். சூப்​பர் சிக்ஸ் திட்​டம் சூப்​பர் ஹிட் ஆனது. ஒவ்​வொரு மாத​மும் ஒன்​றாம் தேதியே முதி​யோர், மாற்​றுத்​திற​னாளி​கள், தனித்து இருக்​கும் பெண்​கள் மற்​றும் தீரா​வி​யாதி உள்​ளவர்​களுக்கு நிதி​யுதவி வழங்​கப்​படு​கிறது. இதற்​காக ரூ.33 ஆயிரம் கோடி செல​விடப்​படு​கிறது. மாநிலம் முழு​வதும் சாலைகளை சீரமைத்​து, அரசுப் பேருந்​துகளில் பெண்​கள் இலவச​மாக பயணம் செய்​யும் திட்​டத்​தை​யும் எங்​கள் அரசு அமல்​படுத்தி உள்​ளது. இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு பேசி​னார்.

விழாவுக்கு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்​வர் பவன் கல்​யாண், அமைச்​சர்​கள் லோகேஷ் உள்​ளிட்​டோர் ஆட்​டோக்​களில் வந்​தனர். அவர்​களுக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. அனை​வரும் காக்​கிச்​ சட்​டை அணிந்​து விழா​வில்​ கலந்​து​கொண்​டனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.