மாஸ்கோ,
பாகிஸ்தான் ராணுவம், சீன தயாரிப்பான ஜெ.எப்.17 போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்களுக்கு மேம்படுத்தப்பட்ட என்ஜின்களை பாகிஸ்தானுக்கு ரஷியா வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது இந்திய பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட தோல்வி என்று காங்கிரஸ் விமர்சனம் செய்தது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு போர் விமான என்ஜின்களை வழங்குவதாக வெளியான தகவலை ரஷியா மறுத்து உள்ளது. இதுதொடர்பாக ரஷியா தரப்பில் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு போர் விமான என்ஜின்களை ரஷியா வழங்குவதாக வெளியான தகவலை நிராகரிக்கிறோம். இதுகுறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. இந்தியாவை சங்கடப்படுத்தும் அளவுக்கு பாகிஸ்தானுடன் அத்தகைய ஒத்துழைப்பை நாங்கள் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.