கொழும்பு,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வரும் 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹெர்லின் 46 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனைகள் முனிபா 2 ரன்னிலும், ஷமாஸ் 6 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த சிட்ரா அமின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேவேளை, மற்ற வீராங்கனைகளான 2 ரன்னிலும் , நடாலியா பர்வேஷ் 33 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து, கேப்டன் பாத்திமாவுடன் ஜோடி சேர்ந்த சிட்ரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தான் 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் சேர்த்துள்ளது. சிட்ரா அமின் 46 ரன்னிலும், கேப்டன் பாத்திமா 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இந்தியா வெற்றிபெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் . பாகிஸ்தான் வெற்றிபெற 120 பந்துகளில் 147 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.