டெல்லி,
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரெயிலில் பயணிகளுக்கு இடையே நடந்த மோதல் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மெட்ரோ ரெயில் சென்று கொண்டிருக்கும்போது அதில் இருந்த இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு பயணிகளும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிற பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :