நியூயார்க்,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதம் நடந்தது. இதில் பாகிஸ்தானின் பிரதிநிதி சைமா சலீம் பேசும் போது, காஷ்மீர் பெண்கள் பல தசாப்தங்களாக பாலியல் வன்முறையை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ஏமாற்றும் கதைகளை கேட்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக காஷ்மீர் குறித்து பொய் பிரசாரம் செய்து வருகிறது.தனது சொந்த மக்களை குண்டுவீசி, திட்டமிட்ட இனப்படு கொலையை நடத்தும் பாகிஸ்தான், தவறான வழிகாட்டுதல் மற்றும் மிகைப்படுத்தல் மூலம் உலகை திசைதிருப்ப முயற் சிக்கிறது. கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் தனது சொந்த ராணுவத்தால் பெண்களை இனப்படு கொலை செய்யும் திட்டமிட்ட பிரசாரத்தை அங்கீகரித்த நாடு ஆகும். பாகிஸ்தானின் பிரசாரத்தை உலகம் உன்னிப்பாக கவனி கவனித்து வருகிறது.
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்து இருக்கிறோம். பெண் அமைதி காக்கும் படையினரை ஆதரிப்பதில் இந்தியா தலைமைத்துவத்துடன் செயல்படுகிறது. இது இந்திய காவல் பணியின் முதல் பெண் அதிகாரி டாக்டர் கிரண் பேடி, 2003-ம் ஆண்டு முதல் பெண் காவல் ஆலோசகராகவும், ஐ.நா. சபை காவல் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.