விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 291 ரன்னில் ஆல்-அவுட்

கோவை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு- நடப்பு சாம்பியன் விதர்பா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் (94 ரன்), ஷாருக்கான் (0) களத்தில் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 107.1 ஓவர்களில் 291 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜித் 96 ரன்களில், வேகப்பந்து வீச்சாளர் நச்சிகெட் பூதே பந்தில் போல்டானார். நச்சிகெட் மொத்தம் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய விதர்பா அணி ஆட்ட நேர முடிவில் 68 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. அமன் மொகாதே (80 ரன்), துருவ் ஷோரே (80 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர்.

மங்களாபுரத்தில் நடக்கும் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 167 ஓவர்களில் 5 விக்ெகட்டுக்கு 586 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தனது 5-வது முதல்தர இரட்டை சதத்தை நிறைவு செய்த கருண் நாயர் 233 ரன்களும் (389 பந்து, 25 பவுண்டரி, 2 சிக்சர்), ரவிச்சந்திரன் ஸ்மரன் 220 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கேரளா 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 21 ரன்களுடன் தடுமாறியது. இன்று 3-து நாள் ஆட்டம் நடைபெறும்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.