ஓஆர்எஸ் முத்திரையுடன் கூடிய இனிப்பு பானங்களை விற்க தடை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மருந்​துக் கடைகளில் இருப்​பில் உள்ள ஓஆர்​எஸ் முத்திரையுடன் கூடிய இனிப்பு பானங்​களை விற்​கக் கூடாது என்று டெல்லி உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்து உள்​ளது. உலகம் முழு​வதும் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழப்​பில் ஐந்​தில் ஒரு மரணம் வயிற்​றுப்​போக்​கால் ஏற்​படு​கிறது.

வயிற்​றுப்​போக்​கின்​போது நீரிழப்பை தடுக்க உப்​பு-சர்க்​கரை கரைசல் (ஓஆர்​எஸ்) வழங்​கப்​படு​கிறது. ஒரு லிட்​டர் ஓஆர்​எஸ் கரைசலில் 2.6 கிராம் சோடி​யம் குளோரைடு, 1.5 கிராம் பொட்​டாசி​யம் குளோரைடு, 2.9 கிராம் சோடி​யம் சிட்​ரேட், 13.5 கிராம் டெக்​ஸ்ட்​ரோஸ் ஆகியவை இருக்க வேண்​டும்.

ஆனால் இந்​திய சந்​தை​யில் ஓஆர்​எஸ் முத்​திரை ஒட்டி விற்​பனை செய்​யப்​பட்ட பெரும்​பாலான பானங்​களில் இந்த விகிதம் பின்​பற்​றப்​பட​வில்​லை. இதுதொடர்​பாக ஹைத​ரா​பாத்தை சேர்ந்த மருத்​து​வர் சிவரஞ்​சனி சந்​தோஷ் உள்​ளிட்​டோர் மத்​திய அரசிடம் முறை​யிட்​டனர். இந்த விவ​காரம் குறித்து இந்​திய மருந்து பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் (எப்​எஸ்​எஸ்​ஏஐ) விரி​வாக ஆய்வு நடத்தி கடந்த அக்​டோபர் 14, 15 ஆகிய தேதி​களில் முக்​கிய உத்​தர​வு​களைப் பிறப்​பித்​தது.

‘‘பாட்​டில்​களில் விற்​கப்​படும் பழச்​சாறுகள் உள்​ளிட்ட பானங்​களில் ஓஆர்​எஸ் முத்​திரையை ஒட்டி விற்​பனை செய்​யக்​கூ​டாது. இதை மீறு​வோர் மீது உணவு பாது​காப்பு தர நிர்ணய சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​படும். ஓஆர்​எஸ் பானங்​களை தயாரித்து விற்​பனை செய்ய உலக சுகா​தார அமைப்​பின் அங்​கீ​காரம் அவசி​யம்’’ என்று எப்​எஸ்​எஸ்ஏஐ உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை பின்​பற்றி தமிழக சுகா​தா​ரத் துறை அண்​மை​யில் வெளி​யிட்ட உத்​தர​வில், “ஓஆர்​எஸ்​எல், ஓஆர்​எஸ்​எல் பிளஸ், ஓஆர்​எஸ் பிட் உள்​ளிட்ட பெயர்​களில் பானங்​களை விற்​பனை செய்​யக்​கூ​டாது. ஓஆர்​எஸ் பெயரில் இனிப்பு பானங்​களை விற்​பனை செய்​தால் மிகக் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். இதுதொடர்​பாக மருந்​தகம், கடைகளில் ஆய்வு நடத்​தப்​படும்’’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த சூழலில் இந்​திய மருந்து பாது​காப்​பு, தர நிர்ணய ஆணைய உத்​தவை எதிர்த்து டாக்​டர் ரெட்​டிஸ் லேபாரெட்​டீஸ் லிமிடெட் நிறு​வனம் சார்​பில் டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த வழக்கு நீதிபதி சச்​சின் தத்தா முன்பு அண்​மை​யில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் சார்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் நீலிமா திரி​பா​தி, சனம் திரி​பா​தி, கவுசிக், கீர்த்தி சர்​மா, ஹர்​சித் சிங் உள்​ளிட்​டோர் ஆஜராகி வாதிட்​டனர். இந்​திய மருந்து பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் சார்​பில் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் சேத்​தன் சர்மா மற்​றும் மூத்த வழக்​கறிஞர்​கள் ஆஜராகினர். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட பிறகு நீதிபதி சச்​சின் தத்​தா, மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார்.

அவர் வழங்​கிய தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஓஆர்​எஸ் முத்​திரை​யுடன் விற்​பனை செய்​யப்​படும் இனிப்பு பானங்​களுக்கு இந்​திய மருந்து பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் (எப்​எஸ்​எஸ்​ஏஐ) தடை விதித்​துள்​ளது. இது மக்​களின் உடல் நலன் சார்ந்த விவ​காரம் ஆகும். இதில் சமரசத்​துக்கு இடமில்​லை. எப்​எஸ்​எஸ்ஏஐ பிறப்​பித்த உத்​தரவு செல்​லும்.

தற்​போது மருந்​தகங்​கள், கடை களில் இருப்​பில் இருக்​கும் பானங்​களை விற்​பனை செய்ய டாக்​டர் ரெட்​டிஸ் லேபாரெட்​டீஸ் லிமிடெட் நிறு​வனம் விடுத்த கோரிக்​கையை முழு​மை​யாக நிராகரிக்​கிறேன். மருந்​தகங்​கள், கடைகளில் இருப்​பில் உள்ள ஓஆர்​எஸ் பானங்​களை விற்க எப்​எஸ்​எஸ்ஏஐ வி​தித்த தடை தொடரும். இவ்​வாறு தீர்ப்​பில்​ தெரிவி​க்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.