புதுடெல்லி,
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா வழியாக டெல்லிக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது நடுவானில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் மங்கோலியா தலைநகர் உலான்பாடருக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் எந்த விதமான கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய பொறியாளர்கள் குழுவினர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :