இந்திய மகளிர் அணியில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளது யார் தெரியுமா?

இந்தியாவில் ஒரு காலத்தில் ஆண்களின் விளையாட்டாக மட்டுமே பார்க்கப்பட்ட கிரிக்கெட், இன்று பெண்களின் ஆதிக்கத்தாலும் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. சமீபத்தில் இந்திய மகளிர் அணி 2025-ம் ஆண்டுக்கான உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இந்த வரலாற்று வெற்றி, வீராங்கனைகளின் புகழ் மற்றும் அங்கீகாரத்தை மட்டுமல்ல, அவர்களின் நிதி நிலையையும் அதிக அளவில் உயர்த்தியுள்ளது. Womens Premier League, பிசிசிஐயின் சம்பள உயர்வு மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம், நமது வீராங்கனைகள் இன்று கோடிகளில் சம்பாதித்து, பலருக்கு உத்வேகமாக திகழ்கின்றனர். 2025-ம் ஆண்டின்படி, இந்தியாவின் முதல் 10 பணக்கார மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் யார் என்று பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

1. மிதாலி ராஜ் (நிகர மதிப்பு: ரூ.40–45 கோடி)

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் லேடி டெண்டுல்கர் என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், அவரது புகழ் சற்றும் குறையவில்லை. விளம்பர ஒப்பந்தங்கள், வர்ணனையாளர் பணி மற்றும் கிரிக்கெட் வளர்ச்சி திட்டங்களில் வழிகாட்டியாக செயல்படுவதன் மூலம் அவர் தொடர்ந்து வருமானம் ஈட்டி வருகிறார்.

2. ஸ்மிருதி மந்தனா (நிகர மதிப்பு: ரூ.32–34 கோடி)

இந்திய அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, களத்தில் மட்டுமல்ல, விளம்பர உலகிலும் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிறார். WPL தொடரில் அதிகபட்சமாக ரூ3.4 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். Hyundai, Nike, Red Bull போன்ற உலகின் முன்னணி பிராண்டுகளின் முகமாக இருந்து, தனது வருமானத்தை பெருக்கி வருகிறார்.

3. ஹர்மன்ப்ரீத் கவுர் (நிகர மதிப்பு: ரூ. 25–26 கோடி)

இந்திய அணிக்கு முதல் உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். பிசிசிஐ-யின் கிரேடு ஏ ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் பெறுகிறார். மேலும், WPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ. 1.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். PUMA, CEAT போன்ற பிராண்டுகளின் விளம்பரங்கள் மூலமும் இவர் கணிசமான வருமானத்தை ஈட்டுகிறார்.

4. ஜூலன் கோஸ்வாமி (நிகர மதிப்பு: ரூ.8 கோடி)

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜூலன் கோஸ்வாமி, ஓய்வுக்கு பிறகும் தனது மதிப்பை தக்க வைத்துள்ளார். லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்துடனான தொடர்பு மூலம் இவரது வருமானம் தொடர்கிறது.

5. ஷஃபாலி வர்மா (நிகர மதிப்பு: ரூ.8–11 கோடி)

இந்தியாவின் இளம் அதிரடி வீராங்கனையான ஷஃபாலி வர்மா, தனது இளம் வயதிலேயே கோடிகளில் சம்பாதித்து வருகிறார். WPL தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இவர், CEAT Tyres மற்றும் பேங்க் ஆஃப் பரோடா போன்ற பிராண்டுகளின் விளம்பரங்களிலும் தோன்றுகிறார்.

பிற முக்கிய வீராங்கனைகள்

தீப்தி ஷர்மா: ஆல்-ரவுண்டரான இவரது நிகர மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும். UP Warriorz அணிக்காக ரூ.2.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்: தனது ஸ்டைலான ஆட்டத்திற்குப் பிரபலமான ஜெமிமாவின் நிகர மதிப்பு ரூ.5 கோடியாகும். இவர் WPL-ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரூ.2.2 கோடிக்கு விளையாடுகிறார்.

பூஜா வஸ்த்ரகர்: வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவரது நிகர மதிப்பு ரூ.3 முதல் ரூ.5 கோடி வரை உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ரூ.1.9 கோடிக்கு வாங்கியுள்ளது.

யாஷிகா பாட்டியா: இளம் விக்கெட் கீப்பர்-பேட்டரான இவரது நிகர மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும்.

ரேணுகா சிங் தாக்கூர்: வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான இவரது நிகர மதிப்பு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.