சென்னை: சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரின் பேரில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெற்று வரும் இடங்களுக்கு சொந்தக்காரர்கள், தலைமுடியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை நடத்துபவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலை 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(நவ. 4) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை […]