125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம் | Automobile Tamilan

1901 முதல் 2025 வரை 125 ஆண்டுகளை கொண்டாடும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், சிறப்பு கிளாசிக் 650 மாடலின் அடிப்படையில் 125 ஆண்டுகால பதிப்பை EICMA 2025 அரங்கில் அறிமுகம் செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டின் 125 ஆண்டுகால பெருமைமிகு வரலாற்று பாரம்பரியத்தையும், கிளாசிக் மாடலின் தனித்துவமான அழகையும் பிரதிபலிக்கும் வகையில் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எத்தனை யூனிட்டுகள் கிடைக்கும், மேலும் விலை மற்றும் எப்பொழுது விற்பனைக்கு போன்ற தகவல் தற்பொழுது வெளியாகவில்லை.

Royal Enfield Classic 650 Special Edition

அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கமான மாடலின் அனைத்து நுட்பங்கள், என்ஜின் போன்றவற்றை கிளாசிக் 650ல் இருந்து பகிர்ந்து கொள்ளுகின்றது.

அதே நேரத்தில், இதன் முக்கிய சிறப்பம்சமாக “125 Years” எனும் தங்க நிற லோகோ கொடுக்கப்பட்டு, மிகவும் பிரத்தியேகமான “Hypershift” வண்ணத்தின் அடிப்பையில் ஆகும். இந்த விசேஷ சிகப்பு மற்றும் தங்கம் ஆகிய நிறங்களில் ஒளியின் கோணத்துக்கு மற்றும் எந்த பகுதியில் இருந்து பார்க்கின்றோமோ அதற்கு ஏற்ப பிரகாசிக்கும்.

இதனால் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் உயிர்ப்புள்ள, கண்கவர் தோற்றத்தை பெறுகிறது. இந்த புதிய பதிப்பு ராயல் என்ஃபீல்டின் பாரம்பரியம், கலைநயமும், கொண்டாட்ட உணர்வும் ஒன்றாக கலந்த ஒரு சிறந்த நினைவுச்சின்னமாக விளங்குகிறது.

 

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.