Asia Cup 2025: பாகிஸ்தான் வீரர் 2 போட்டிகளில் இடைநீக்கம்; பும்ரா, சூர்யகுமார் மீது அபராதம்

2025 ஆம் ஆண்டு ஐசிசி ஆசியக் கோப்பைப் போட்டிகளின் போது பல நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று (நவ 4) உறுதிப்படுத்தியது.

குறிப்பாக செப்டம்பர் 14, 21 மற்றும் 28 தேதிகளில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிகளில் சம்பவங்கள் குறித்து எமிரேட்ஸ் ஐ.சி.சி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரீ உறுப்பினர்களால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செப்டம்பர் 14 போட்டியில் இந்தியா கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தானின் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் ஐ.சி.சி நடத்தை விதிகள் பிரிவு 2.21 ஐ மீறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். பிரிவு 2.21 விளையாட்டிற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நடத்தையை குறிப்பிடுவதைக் குறிப்பதாகும்.

ஆசியக் கோப்பை வெற்றி
ஆசியக் கோப்பை வெற்றி

சூர்யகுமார் யாதவுக்கு போட்டியின் கட்டணத்தில் 30% அபராதமும் 2 தகுதி குறைப்பு புள்ளிகளும் (Demerit Points) வழங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப்-க்கும் இதே அபராதமும் தகுதி குறைப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும் ஒரு தகுதி குறைப்பு புள்ளியும் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 21ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்டீப் சிங் ஆபாசமான, புண்படுத்தும் அல்லது அவமதிக்கும் வகையில் சைகையைப் பயன்படுத்துவது தொடர்பான பிரிவு 2.6-ஐ மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதில் அவர் குற்றவாளி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்படவில்லை.

அர்ஷ்தீப் சிங்

செப்டம்பர் 28ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நடத்தைக்காக பிரிவு 2.21 இன் கீழ் (இந்தியா) குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார், இதனால் விசாரணைக்கு அவசியமில்லாமல் அவருக்கு 30% அபராதமும் 2 தகுதி குறைப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதேப்போட்டியில் நடந்த சம்பவம் குறித்து ஐசிசி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, ஹாரிஸ் ரவூஃப் மற்றொரு முறையும் பிரிவு 2.21 ஐ மீறியதற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கூடுதலாக இரண்டு தகுதி இழப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டன.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

ஐசிசி ஆசியக் கோப்பை 2025 இந்தியா – பாகிஸ்தான் நடத்தை விதிமீறல் தண்டனை விவரங்கள்:

  • சூர்யகுமார் யாதவ் (இந்தியா): போட்டி கட்டணத்தில் 30% அபராதம், 2 தகுதி இழப்பு புள்ளிகள்

  • சாஹிப்சாதா ஃபர்ஹான் (பாகிஸ்தான்): அதிகாரப்பூர்வ எச்சரிக்கை, 1 தகுதி இழப்பு புள்ளி

  • ஹாரிஸ் ரவூஃப் (பாகிஸ்தான்): இரண்டு தனித்தனி குற்றங்கள்; இரண்டு முறை 30% அபராதம், 4 தகுதி இழப்பு புள்ளிகள் மற்றும் 2 போட்டிகள் இடைநீக்கம்

  • ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா): அதிகாரப்பூர்வ எச்சரிக்கை, 1 தகுதி இழப்பு புள்ளி

  • அர்ஷ்டீப் சிங் (இந்தியா): குற்றவாளி இல்லை என்று கண்டறியப்பட்டது, எந்த தடையும் இல்லை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.