Ravindra Jadeja CSK – RR IPL Trade: 2026 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தொடருக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் எதிர்ப்பார்ப்புகள் அதிகரிக்கின்றன. அதாவது ஐபிஎல் மினி ஏலம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெற இருக்கும் நிலையில், வீரர்களை தக்கவைக்கும் பணிகளை அந்தந்த அணிகள் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் முக்கிய வீரர்கள் சிலர் டிரேட் முறையில் வேறு அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக் கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலைகளே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு காரணம்.
Add Zee News as a Preferred Source
Ravindra Jadeja: சிஎஸ்கே – ஆர்ஆர் டிரேட் பேச்சுவார்த்தை
அணிகள் மாறும் முக்கிய வீரர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தான் அதிகமாக பேசும்பொருளாக உள்ளார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சன் வேண்டும் என்றால் ஜடேஜாவை தாருங்கள் என கேட்டிருக்கிறதாம். ஜடேஜா சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் என்பதால் இந்த டீலுக்கு சமதிக்க சென்னை அணி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறதாம். ஒருவேளை சிஎஸ்கே அணி ஜடேஜாவை கொடுக்க முன் வந்தாலும் அவர் ஆர்ஆர் அணிக்கு செல்ல மாட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதாவது ஜடேஜாவுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மிகப்பெரிய பகை இருப்பதாக கூறப்படுகிறது.
Ravindra Jadeja – Rajasthan Royals Problem: ஜடேஜாவை அவமானப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் வார்னே தான் ஜடேஜாவை வளர்த்து எடுத்தார். இதில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே ஜடேஜா சிறப்பாக விளையாடினார். இந்த நிலையில், 2010 ஐபிஎல்லுக்கு முன் ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்ல விரும்பினார். ஆனால் அவரது விருப்பத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் ஏற்கவில்லை. அதோடு பிசிசிஐயிடம் ஜடேஜா விதிகளுக்கு மீறு செயல்படுவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது. இதையடுத்து அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட ஜடேஜாவுக்கு தடை விதிக்கபப்பட்டது.
இதனை அடுத்து ஜடேஜா 2011ல் கொச்சி டெஸ்கர் அணிக்காக விளையாடினார். அதன் பின் 2012ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணீக்காக வி:ளையாடி வருகிறார். இந்த நிலையிதான் தன்னை ஆரம்ப கட்டத்தில் அவமானப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ரவீந்திர ஜடேஜா இணைய மாட்டார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் ஜடேஜாவிடம் பேசிவிட்டுதான் சிஎஸ்கே அணி நிர்வாகம் ராஜதாஸ் ராயல்ஸ் அணியிடம் பேச்சுவார்த்தியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
About the Author
R Balaji