‘பராசக்தி’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீஸாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘அடி அலையே’ பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல கவனம் பெற்றிருந்தது.

இத்திரைப்படம் ஜி.வி-யின் 100-வது ஆல்பம் என்பதால் அவருக்கும் இந்தத் திரைப்படம் கூடுதல் ஸ்பெஷல். இப்படத்தில் மற்றொரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார்.
யுவனின் 100-வது திரைப்படமான ‘பிரியாணி’ படத்தில் ஜி.வி. பிரகாஷும் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் சுதா கொங்கரா, “நானும் பவதாரிணியும் ‘மித்ர்’ படத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, யுவன் கம்போஸ் செய்த பாடல்களின் டேப்பை எங்கள் இருவரையும் கேட்க வைப்பார்.
இன்று அவர் என்னுடைய படத்திற்காகப் பாடியிருக்கிறார். வாழ்க்கை ஒரு வட்டமாக உணர்கிறேன்.

இதுவொரு வாழ்நாள் நினைவு. ஜி.வி. பிரகாஷின் 100-வது ஆல்பத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி.
யுகபாரதியின் அற்புதமான வரிகளுக்கு உயிர்கொடுத்து அழகான பாடலைப் பாடியிருக்கிறீர்கள் யுவன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.