துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி அக்டோபார் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் செனுரன் முத்துசாமி (தென் ஆப்பிரிக்கா), நோமன் அலி (பாகிஸ்தான்) மற்றும் ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த நிலையில் அக்டோபார் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி வென்றுள்ளார்.
அதேபோல் அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா (இந்தியா), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இடம்பெற்றனர்.
இதில் தென் ஆப்பிரிக்கா வீராங்கனை லாரா வோல்வார்ட் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.