மும்பை,
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்குள் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதனிடையே டிரேடிங் முறையில் வீரர்கள் அணிமாற்றம் செய்யலாம் என்ற விதிமுறையும் இருப்பதினால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை அணிகளுக்கு இடையே தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லக்னோ அணி வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை அணி டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. ஷர்துல் தாக்கூரை ரூ.2 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியுள்ளது.