சென்னை,
19-வது ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதற்காக தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் விவரத்தை இன்று ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி 10 அணிகளும் அறிவித்துவிட்டன.
முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். சீசனில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதில் சென்னை அணியின் கேப்டனா ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக பாதியில் விலகினார்.
அதன் காரணமாக அந்த அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஆனால் அவரது தலைமையிலும் சொதப்பிய சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
அந்த சூழலில் தற்போது சிஎஸ்கே நிர்வாகம் டிரேடிங் முறையில் ராஜஸ்தான் கேப்டனான சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது. கேப்டன்ஷிப்பில் அனுபவம் வாய்ந்த அவரை கேப்டனாக்கும் திட்டத்திலேயே சிஎஸ்கே வாங்கியதாக கருத்துகள் நிலவின.
இதனால் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் (2026) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியா அல்லது ருதுராஜ் ஜெய்ஜ்க்வாட்டா அல்லது சஞ்சு சாம்சனா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவியது.
இந்நிலையில் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்தான் என்று சிறப்பு போஸ்டர் வெளியிட்டு நிர்வாகம் உறுதி செய்துள்ளது.