லக்னோ,
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கங்கை நதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையின் போது, வீரர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினர்.
இதில் கங்கை நதி வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால், அவர்களை எப்படி தடுப்பது என்பது தொடர்பான ஒத்திகை தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள், ரப்பர் படகுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. சமீபத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :