திருப்போரூர் அருகே வெடித்து சிதறிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

திருப்போரூரை அடுத்த நெம் மேலியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உப்பு தொழிற்சாலை வளாகத்தில் விழுந்துவெடித்துசிதறியபயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மற் றும் சிதறிய விமான பாகங்களை, விமானப்படைத் துறையினர் மீட்டு தாம்பரம் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர்.

சென்னையை அடுத்த தாம் பரம் விமானப்படை பயிற்சி தளத்திலிருந்து நேற்று முன் தினம் பிற்பகல் புறப்பட்ட பயிற்சி விமானம், திருப்போரூர் அருகே வானில் பறந்து கொண் டிருந்தபோது, விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. பயிற்சி விமானம் நெம்மேலி புறவழி சாலை அருகே உள்ள உப்பு தயாரிப்பு தொழிற்சாலை வளாகத்தில்

விழுந்து வெடித்து சிதறியது. முன்னதாக, விமானி பாராசூட் மூலமாக விமானத்தில் கீழே குதித்து உயிர் தப்பினார். விமானம் விழுந்த இடத்தில் சிதறிய விமான பாகங்களை விமானப் படையினர் சேகரித்தனர். விபத்து நடந்த இடத்தில், தாம்பரம் விமானப் படையினர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, மீட்பு பணி களை மேற்கொண்டனர். 2-வது நாளாக நேற்று 15 அடி பள்ளத் தின் சேற்றில் புதைந்த விமானத் தின் கருப்பு பெட்டி உள்பட பிற பாகங்களை தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதில், 2 பொக் லைன், ஒரு கிரேன் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு தொடங் கிய பணிகள் பகல் 12:30 மணி வரை நீடித்தது. இதில், சேற்றில் சிக்கியிருந்த கருப்பு பெட்டியை மீட்ட விமானப் படை வீரர்கள் பாதுகாப்பாக எடுத்து சென்றனர். விமானத்தின் பிற பாகங்களை சேகரித்தனர்.

இதனிடையே, செங்கை கோட்டாட்சியர் கணேஷ்கு மார், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர், விமானப் படை அதிகாரிகளுடன் ஆலோ சித்தனர். வெடித்து சிதறிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகவும். அடுத்த கட்ட பணிகளை விமானப் படை துறையினர் மேற்கொள்வர் எனவும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கருப்பு பெட்டி, சேகரிக்கப்பட்ட மற்ற பாகங்கள் தாம்பரம் விமானப்படை தளத்துக்கு வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கருப்பு பெட்டி டெல்லி விசாரணை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.