மும்பை,
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி கவுகாத்தியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கூடுதல் வீரராக வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார்.
2-வது போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, சிமோன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், மார்க்ராம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரெய்ன் மற்றும் லுங்கி நிகிடி