IPL 2026 Mini Auction Delhi Capitals: 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னாதாக் நடைபெற்ற மெகா ஏலத்தின்போது, ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 27 கோடிக்கு வாங்கியது. இதன் காரணமாக டெல்லி அணி புதிய கேப்டனாக அக்சர் படேலை நியமித்தது. கடந்த ஐபிஎல்லில் இளம் படையுடன் பலம் வாய்ந்த அணியாக காணப்பட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் அதன் பின் சோதப்பியதால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
Add Zee News as a Preferred Source
IPL 2026: டெல்லி அணி கழட்டிவிட்ட 7 வீரகள்
இதன் காரணமாக வர இருக்கும் 2026 ஐபிஎல் தொடரில் வலுவான ஆட்டத்தை கொடுக்க காத்திருக்கின்றனர். மேலும், டிசம்பர் 16ஆம் தேதி நடக்க இருக்கும் மினி ஏலத்தில் சிறந்த வீரரை தேர்வு செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். சமீபத்தில் அனைத்து ஐபிஎல் அணிகளாலும் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.
அந்த வகையில் டெல்லி அணி ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், செடிகுல்லா அடல், மன்வந்த் குமார், மோஹித் சர்மா, தர்ஷன் நல்கண்டே உள்ளிட்ட வீரர்களை விடுவித்தனர். இதில் முக்கிய வீரர்களாக இருந்த அதாவது அணியின் தொடக்க வீரராக இருந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோரை விடுவித்ததால், டெல்லி அணி சிறந்த தொடக்க வீரர்களை களமிறக்க திட்டமிட்டு வரும்.
IPL 2026: ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்க வீரர்களுக்கான இடத்தை சரி செய்தால் சிறப்பாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரருக்கான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டலஸ் அணி சிறப்பாகவே விளையாடியது. குறிப்பாக பந்து வீச்சை பொறுத்தவரையில் சிறப்பாகவே செயல்பட்டிருந்தனர். அது வேகப்பந்து வீச்சாக இருந்தாலும், சுழற்பந்து வீச்சாக இருந்தாலும் சரி.
IPL 2026: சிறந்த தொடக்க ஜோடியை தேர்வு செய்ய வேண்டும்
குறிப்பாக அக்சர் படேல், குல்தீப் யாதவ், விப்ராஜ், சிங் என தரமான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஒரு பிரச்சனை உள்ளது. அவர்கள் தொடக்க வீரர்களுக்கான இடத்தை சரி செய்ய வேண்டும். ஏனென்றால், தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கே.எல். ராகுல் சோதித்துவிட்டது. ஆனால் டெல்லி அணிக்கு ஒரு நிலையான ஜோடி கிடைக்கவில்லை. எனவே அவர்கள் நிலையான ஒரு தொடக்க ஜோடியை தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யும் பட்சத்தில் டெல்லி அணி மேலும் வலுவடையும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
About the Author
R Balaji