"S.I.R என்பது குடியுரிமை, எதிர் வாக்குகளை நீக்கும் பாஜகவின் செயல்திட்டம்" – திருமா

‘S.I.R’ எனும் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு செயல்படுத்தப்படுவதை எதிர்த்து திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்காத தவெக தனியாக ‘S.I.R’யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது வி.சி.க, திருமாவளவன் தலைமையில் சென்னையில் நவ 24ம் தேதி ‘S.I.R’யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது.

SIR
SIR

இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன், “‘S.I.R’ வேண்டாம் என்பதை முன்வைத்து விசிக சார்பில் நவ 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். S.I.R என்பது பாரதிய ஜனதா கட்சியும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்தும் ஒரு கூட்டுச் சதி.

அவர்கள் இதை, குடியுரிமையைப் பறிப்பதற்கான செயல்திட்டமாகவும், எதிர் வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான செயல்திட்டமாகவும் திட்டமிட்டு வடிவமைத்திருக்கிறார்கள். இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை.

திருமாவளவன்
திருமாவளவன்

‘S.I.R’ யை உடனே நிறுத்திவிட்டு, இதற்குமுன் பயன்படுத்திய ‘SR (Electoral Roll Summary Revision)’ என்ற முறையையே தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். ‘S.I.R’ என்பது குடியுரிமையைப் பறிக்கும் CAA சட்டத்தை செயல்படுத்தும் சதிச்செயலுக்கான இன்னொரு வடிவம்தான்

பீகார் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கே அச்சுறுத்தல்தான். ஜனநாயகத்தைக் கொன்று புதைக்கின்ற ஒரு சதித்திட்டத்தின் விளைச்சல்தான்.” என்று பேசியிருக்கிறார் விசிக தலைவர் திருமா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.