சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், “நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு நடிகர் தனுஷின் பெயரைப் பயன்படுத்தி ‘அட்ஜஸ்ட்மன்ட்’ கேட்டார்” என்ற சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்ப, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, “சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள்.

அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன்.” என்று விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டிருந்தார் நடிகை மன்யா ஆனந்த்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், “சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும் எந்தவித தொடர்பும் யாருடனும் நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக பரவும் தகவல்கள் எல்லாம் போலியானது.
என் பெயரையோ அல்லது ‘wunderbar Flims’ தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால் அது முழுக்க முழுக்க போலியானது. இதுபற்றி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், 2025 பிப்ரவரி 19ம் தேதியும் ஏற்கனவே விளக்கமும் அளித்திருந்தேன்.
— Sreyas (@theSreyas) November 19, 2025
+91 75987 46841 மற்றும் 91 7598756841 என்பது என்னுடைய நம்பர் அல்ல. யாரோ இதை என்னுடை நம்பர் என என்னுடைய புகைப்படம் எல்லாம் வைத்து ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார் ஸ்ரேயாஸ்.