சென்னை: ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொண்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடிவிட்டு சென்ற நிலையில், கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய முடியாத ஏற்பட்டுள்ளதாக மத்தியஅரசு கூறி உள்ளது. இதை சுட்டிக்காட்டிய, முதல்வர் ஸ்டாலின், மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. அதற்குள் விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை மத்தியஅரசு செய்துள்ளது என விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் […]