சென்னை: தமிழ்நாட்டில், 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொழிற்துறை 4.0 தரங்களுக்கு ஏற்ப திறன்மிகு மையங்களாக மேம்படுத்திடும் வகையில் டாடா டெக்னால ஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து அவரது முன்னிலையில், , 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் திறன்மிகு மையங்களாக […]