AR Rahman:“இங்கு இருக்கும் எனது ஒரே பிரச்னை" – தன் பயணம் குறித்து பகிர்ந்த் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து ஆன்மீகம் சார்ந்தும், சூஃபியிசம் சார்ந்தும் இயங்கும் பயணம் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “நான் அனைத்து மதங்களின் ரசிகன். இஸ்லாம், இந்து மதம் மற்றும் கிறிஸ்தவத்தைப் படித்திருக்கிறேன்.

மதத்தின் பெயரால் மற்றவர்களைக் கொல்வது அல்லது தீங்கு செய்வதுதான் இங்கு இருக்கும் எனது ஒரே பிரச்சனை. மேடையில் நிகழ்ச்சி நடத்துவது பெரும்பாலும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடும் ஒரு புனித இடத்திற்குள் நுழைவது போல் உணர்கிறேன்.

ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

நாம் அனைவரும் ஒற்றுமையின் பலன்களை அங்கு அனுபவிக்கிறோம். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள், அங்கு ஒன்று கூடுகிறார்கள்.

சூஃபித்துவம் என்பது இறப்பதற்கு முன் இறப்பது போன்றது. உங்களின் சுயத்தை மறைக்கும் பல திரைகள் உங்களுக்குள் இருக்கும். அந்த திரைகளை அகற்ற, நீங்கள் அழிந்து போக வேண்டும். காமம், பேராசை, பொறாமை, முன்முடிவு என அனைத்தும் இறக்க வேண்டும்.

உங்கள் ஈகோ போய்விட்டால் நீங்கள் கடவுளைப் போல வெளிப்படையானவராக மாறுகிறீர்கள். மதப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொருவரின் நம்பிக்கையின் நேர்மை எனக்குப் பிடிக்கும்.

ஏ.ஆர். ரஹ்மான் - AR Rahman
ஏ.ஆர். ரஹ்மான் – AR Rahman

நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம், ஆனால் நம்பிக்கையின் நேர்மையே இங்கு அளவிடப்படுகிறது. அதுதான் நம்மை நல்ல காரியங்களைச் செய்ய வைக்கிறது. அதனால் மனிதநேயம் பயனடைகிறது. நாம் அனைவரும் ஆன்மீக ரீதியாக பணக்காரர்களாக இருக்க வேண்டும். ஆன்மீக செல்வம் வரும்போது, பொருள் செல்வம் பின்தொடர்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.