புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப், தனது 110cc ஸ்கூட்டர் பிரிவில் கிடைக்கின்ற 2026 ஜூம் மாடலில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உடன் மிக நேர்த்தியான நிறங்களை கொண்டதாக விற்பனைக்கு ரூ.77,429 முதல் ரூ.82,960 வரை (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது.

2026 Hero Xoom 110

முந்தைய வெள்ளை, ஆரஞ்ச் நிறம் நீக்கப்பட்டு தற்பொழுது 125 மில்லியன் லோகோ, பாடி கிராபிக்ஸ், ஜூம் லோகோ உள்ளிட்ட இடங்களில் இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான மேம்பாடுகளை பெற்று, பேஸ் VX வேரியண்டில் கருப்பு, நீலம் மற்றும் மஞ்சள் என மூன்று நிறத்துடன் கூடுதலாக டாப் ZX வேரியண்டில் சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டு இறுதியாக காம்பேட் எடிசனும் கிடைக்கின்றது. மற்ற வசதிகளில் வேரியண்ட் வாரியான வசதிகள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் வழங்கப்படுகின்றது.

லிட்டருக்கு 53 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என சான்றிதழ் பெற்று ஹீரோவின் i3S (Idle Stop-Start System) நுட்பத்துடன் 110cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற ஹீரோ ஜூம் 110 அதிகபட்சமாக 7,250rpm-ல் 8bhp பவர், 5,750rpm-ல் 8.7Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் CVT கியர்பாக்ஸ் உள்ளது.

கார்னரிங் லைட் உடன் புரோஜெக்டர் LED ஹெட்லேம்ப் உடன் ஸ்போர்ட்டிவ் தோற்றத்திற்கு அழகைத் தருகிற ‘H’ வடிவ விளக்குகள் வழங்கப்பட்டு LED டெயில் லேம்ப் மற்றும் அதே வடிவில் பொசிஷன் லேம்ப் ஆகியவை இதற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளிக்கின்றன. 12-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்களுடன் வருகிறது.

ப்ளூடூத் இணைப்புடன் கூடிய முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு வேகம், எரிபொருள் அளவு, ட்ரிப் மீட்டர், நிகழ் நேர மைலேஜ் கொடுக்கப்பட்டு அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி அலெர்ட்களை மீட்டரில் பெறலாம். இருக்கையின் கீழ் போதுமான சேமிப்பு இடம் மற்றும் USB சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகள் பயணிகளுக்கு சௌகரியம் அளிக்கின்றன.

  • XOOM VX OBD2B – ₹ 77,429
  • XOOM ZX OBD2B – ₹ 82,407
  • XOOM COMBAT OBD2B – ₹ 82,960

(ex-showroom)

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.