நின்றுபோன ஸ்மிருதி மந்தனாவின் திருமணம்.. தந்தைக்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சி

Smriti Mandhana – Palash Muchhal marriage Postponed: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுக்கு இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுடன் இன்று (நவம்பர் 23) திருமணம் நடக்கவிருந்தது. மகாராஷ்டிராவின் சாம்தோலில் உள்ள மந்தனா பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை உடனடியாக சங்கிலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

Add Zee News as a Preferred Source

Smriti Mandhana Latest News: நின்றுபோன ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் 

இதன் காரணமாக இன்று நடக்கவிருந்த ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் தற்போது சீனிவாஸ் மந்தானா உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சில நாட்கள் இருக்க உள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சாம்தோலில் திருமண விழாவுக்கான ஏற்பாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மீண்டும் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் எப்போது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

Smriti Mandhana Latest News: தந்தைக்கு நெஞ்சு வலி 

விரையில் சீனிவாஸ் மந்தாவின் உடல்நிலை சரியாகி ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான தகவலை உறுதிபடுத்திய ஸ்மிருதிய்ன் மேலாளர் துஹின் மிஸ்ரா கூறியதாவது, இன்று காலை சீனிவாஸ் மந்தனாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. சிறிது நேரம் காத்திருந்தோம். அவர் நிலமாக இருப்பார் என நினைத்தோம். ஆனால் நிலைமை மோசமானதால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். 

Smriti Mandhana Latest News: திருமணத்தை ஒத்திவைத்த ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி தந்தையுடன் மிகவும் நெருக்கமானவர் என்பது உங்களுக்கே தெரியும். அதனால் தனது தந்தை குணமடையும் வரை இன்று நடக்கவிருந்த தனது திருமணத்தை காலவரையின்று ஒத்திவைத்து அவர் முடிவு செய்துள்ளார். அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

Smriti Mandhana Latest News: இந்தியாவுக்காக பல்வேறு சாதனைகள் 

29 வயதான ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பயணித்து வருகிறார். அவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்திருக்கிறார். இதுவரை 117 ஒருநாள் போட்டிகள், 153 டி20 போட்டிகள்  மற்றும் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9933 ரன்களை குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் மற்றும் 68 அரைசதங்களும் அடங்கும். இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென நின்றுபோனது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை விரைவில் குணமடை வேண்டும் என்றும் ஸ்மிருதி மந்தனா தான் விரும்பிய இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் நினைத்தபடி திருமணம் நடைபெற வேண்டும் என்றும் பகிர்ந்து வருகின்றனர்.  

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.